Saturday, October 24, 2009

மருதாணி

உனக்கு நான் மருதாணி இட்டு விட வேண்டும் என்று ஆசையாய் கைகளை நீட்டினாய் ,
சரி என்று உன் விரல்களை பற்றினேன் , அடுத்த கணமே உன் உடல் முழுவதும் அல்லவா சிவந்தது !!!!
இதற்கு ஏனடி மருதாணி ????? இந்த மானிடன் போதுமே ???

Tuesday, October 20, 2009

உன் வைராக்கியம்

என்னையே மணக்க வேண்டும் என்ற வைராக்கியம் உனக்கு பிறப்பில் இருந்தே உள்ளது ..... எப்படி ?
அதனால் தானே காத்திருந்து எனக்கு பின்னால் பிறந்தாய் ...!!!

Monday, October 19, 2009

உன் தரிசனம்

மாடி படியில் நான் வரும்போது , அழகாக சிரித்தபடியே குறுக்கே வந்தாய் ,
வழி மரித்தாய் என்று நான் நினைத்தேன் ..
ஆனால் காதல் என்னும் சிறப்பு வழியில் என்னை அழைத்து சென்று
உன் தரிசனம் தந்தாய் :-)

போதை

நான் போதைக்கு அடிமை
உன் மடியில் ஆசையாய் விழுந்து , மயங்கி கிடக்கும் போதையை கூறினேன்
போதையால் வாழ்கையை இழந்தவர் பலர் , உன் போதையால் வாழ்கையை பெற்றவன் நான் !!

Sunday, October 18, 2009

நாம் இணைவோம்

எத்தனை தடைகளடி நம்மை பிரிக்க ?
சாவினால் இணைவது நம் வழி அல்ல ,
சாதித்து இணைவதே நம் வழி :)

வேகத்தடை

சாலையில் வேகத்தடை - என் வேகத்தை குறைத்தது
உன் வேக தடையோ - என் வேகத்தை கூட்டியது ;-)